டென்னிஸ்

Madrid Open டென்னிஸ்: காலிறுதியில் கேஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நார்வே வீரரான கேஸ்பர் ரூட், பெல்ஜியத்தின் அலெக்சாண்டர் பிளாக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பிளாக் 6-4, 6-4 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீரரான கேஸ்பர் ரூட் தொடரில் இருந்து வெளியேறினார்.