டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் காஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது. நார்வே வீரர் காஸ்பர் ரூட் 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

டொரன்டோ:

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையரில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவின் கரன் கச்சனாவ், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கச்சனாவ் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான காஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT