பாரீஸ்:
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெப்டன் ஜோடி, குரோசியாவின் நிகோலா மெக்டிக்- நெதர்லாந்தின் வெஸ்லி கூலுப் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-7 (13-15), 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் தொடரில் இருந்தும் வெளியேறியது.
கடந்த அக்டோபரில் நடந்த வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரிலும் போபண்ணா ஜோடி காலிறுதியில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.