டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பென் ஷெல்டன்

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்தது.

கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்றது.

இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், சக நாட்டு வீரரான பிராண்டன் நகஷிமா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பென் ஷெல்டன் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரேசிலின் ரபேல் மேடோஸ்-ஆர்லண்டோ லஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

SCROLL FOR NEXT