பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் அமெரிக்காவின் டாமி பாலை வீழ்த்தி, பென் ஷெல்டன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், சக நாட்டு வீரரான டாமி பால் உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய பென் ஷெல்டன் முதல் செட்டை 6-3 என வென்றார்.
இதற்கு பதிலடியாக 2வது செட்டை டாமி பால் 6-4 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அதிரடியாக ஆடிய பென் ஷெல்டன் 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.