டென்னிஸ்

டென்னிஸ் தரவரிசை: இரு இடங்கள் முன்னேறிய டெய்லர் பிரிட்ஸ்

ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தை தக்கவைத்தார்.

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் (இத்தாலி) முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

இரண்டாம் இடத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமியும், ஐந்தாவது இடத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் இடம்பிடித்துள்ளனர்.

கடைசியாக நடந்த சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் இரு இடங்கள் முன்னேறி 8-வது இடம் பிடித்துள்ளார்.

ரஷியாவின் டேனில் மெத்வதேவ் ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடமும், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஒரு இடம் சரிந்து ஏழாவது இடமும், இத்தாலியின் பிளேவியோ கோபாலி 9வது இடத்திலும், அமெரிக்காவின் பென் ஷெல்டன் இரு இடங்கள் சரிந்து 10-வது இடத்திலும் உள்ளனர்.