டென்னிஸ்

டென்னிஸ் தரவரிசை: இரு இடம் முன்னேறி டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த ஜோகோவிச்

ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தை தக்கவைத்தார்.

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக்

சின்னர் (இத்தாலி) முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

இரண்டாம் இடத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவும், மூன்றாவது இடத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசும், நான்காவது இடத்தில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமியும், ஐந்தாவது இடத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் இடம்பிடித்துள்ளனர்.

ஜோகோவிச் முன்னேற்றம்

கடைசியாக நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நோவக் ஜோகோவிச், இத்தாலியின் சின்னரிடம் 4-6, 4-6, 4-6 என தோல்வி அடைந்தார்.

இதன்மூலம் ஜோகோவிச் இரு இடங்கள் முன்னேறி ஐந்தாம் இடம் பிடித்துள்ளார்.

முன்னதாக, பிரெஞ்சு ஓபனின் 3வது சுற்றில் பிரேசில் வீரர் பொன்சேகாவிடம் தோற்று ஜோகோவிச் வெளியேறினார். இத்தாலி ஓபனில் 2வது சுற்றில் குரோசியா வீரர் டினோ பிரிஸ்மிக்கிடம் தோல்வி அடைந்தார். ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசிடம் தோல்வி அடைந்தார்.

ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஒரு இடம் சரிந்து ஆறாவது இடமும், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் ஒரு இடம் முன்னேறி ஏழாவது இடமும், அமெரிக்காவின் பென் ஷெல்டன் இரு இடங்கள் இறங்கி 8வது இடமும், இத்தாலியின் பிளேவியோ கோபாலி 9வது இடத்திலும், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 10வது இடத்திலும் உள்ளனர்.