சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
இரண்டாம் இடத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமியும், ஐந்தாவது இடத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் இடம்பிடித்துள்ளனர்.
நேற்று நடந்த கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் பென் ஷெல்டன் 4 இடங்கள் முன்னேறி 6-வது இடம் பிடித்துள்ளார்.
ரஷியாவின் டேனில் மெத்வதேவ் ஒரு இடம் பின்தங்கி ஏழாவது இடமும், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஒரு இடம் சரிந்து எட்டாவது இடமும், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 9வது இடத்திலும், இத்தாலியின் பிளேவியோ கோபாலி 10-வது இடத்திலும் உள்ளனர்.