டென்னிஸ்

அமெரிக்க ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சபலென்கா

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் சபலென்கா, எம்மா நவரோ மோதினார். 2-வது முறையாக அமெரிக்க ஓபனின் இறுதிப்போட்டிக்கு சபலென்கா தகுதி பெற்றுள்ளார்.

மாலை மலர்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனையான எம்மா நவரோவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 7-6 (7/2) என்ற செட் கணக்கில் நவரோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் 2-வது முறையாக அமெரிக்க ஓபனின் இறுதிப்போட்டிக்கு சபலென்கா தகுதி பெற்றுள்ளார்.