சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் ரஷியாவின் கலின்ஸ்கயா, அமெரிக்காவின் இவா ஜோவிக் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய இவா ஜோவிக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் அன்னா கலின்ஸ்கயா காலிறுதி சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.