டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ரஷிய வீரர் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபெல்வ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், ஸ்பெயினின் டேனியல் மெரிடா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 7-6 (7-3) என்ற செட் கணக்கில் முதல் செட்டை வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஸ்பெயின் வீரர் அதிரடியாக ஆடி அடுத்த 3 செட்களை 6-2, 6-4, 6-4 என வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீரரான ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.