முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது முதல் சுற்று ஆட்டம் நடந்து வருகிறது.
இன்று நடந்த முதல் சுற்று போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், சீனாவின் ஷான் ஜுன்செங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சீன வீரர் முதல் செட்டை 7-5 என வென்றார். இதற்கு பதிலடியாக ரூப்லெவ் 2வது செட்டை 6-4 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சீன வீரர் 7-6 (7-5) என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீரரான ரஷியாவின் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.
மற்ற போட்டிகளில் கிரீசின் சிட்சிபாஸ், பிரிட்டனின் கேமரூன் நூரி, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உள்ளிட்டோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.