டென்னிஸ்

French Open டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற ஆண்ட்ரீவாவுக்கு இத்தனை கோடி பரிசா?

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று நேற்று நடந்தது. இதில் நம்பர் 8 வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, போலந்தின் மஜா சாலின்ஸ்கா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய மிர்ரா ஆண்ட்ரீவா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நடைபெற்றது. பிரெஞ்சு ஓபன் பட்டத்தை முதல் முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ரஷிய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவாவுக்கு 31 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பெற்ற சாலின்ஸ்காவுக்கு 15.5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT