சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா பெகுலா முதல் செட்டை 6-4 என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக ஆடிய அலெக்சாண்டர் ஈலா அடுத்த இரு செட்களை 6-4, 6-0 என வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஸ்பெயினின் ரபேல் ஜோடார் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இதேபோல், ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரிட்டனின் ஜூலியன் காஷ்-லாய்ட் கிளாஸ்பூல் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.