டென்னிஸ்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை தோல்வி

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் பிலிப்பைன்ஸ் வீராங்கனையான அலெக்சாண்ட்ரா ஈலா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா, ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஈலா முதல் செட்டை 6-2 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஷ்னைடர் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் அலெக்சாண்ட்ரா ஈலா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT