ஸ்வெரேவ்
டென்னிஸ்

டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் ஸ்வெரேவ்

ஷாங்காய் ஓபனில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிசில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ், பெல்ஜியத்தின் பெர்க்ஸ் என்ற தரநிலை பெறாத வீரரிடம் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் 5-7, 6(4)-7 என நேர்செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஸ்வெரேவ் நம்பர் 1

இதனால் ஸ்வெரேவ் உலக டென்னிஸ் தரவரிசையில் ஆண்டு இறுதியில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க இருக்கிறார். சின்னர் ஏற்கனவே காயம் காரணமாக விளையாடாமல் உள்ளார். இதனால் ஸ்வெரேவ் முதல் இடத்தை பிடிக்கிறார்.

2026 ஆண்டு இறுதியில் போரிஸ் பெக்கருக்குப் பிறகு ஜெர்மன் வீரர் ஒருவர் முதல் இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், ஸ்வெரேவ் முதல் முறையாக நம்பர் ஒன் இடத்தை பிடிக்க இருக்கிறார்.

ஸ்வெரேவ் 2026ம் ஆண்டுக்கான பிரெஞ்ச் மற்றம் அமெரிக்க கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விம்பிள்டன் 2-வது இடத்தையும், ஆஸ்திரேலியா ஓபனில் அரையிறுதிக்கும் முன்னேறியிருந்தார்.

SCROLL FOR NEXT