டென்னிஸ்

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ்: அலெக்ஸ் டி மினார், யூகோ ஹம்பர்ட் காலிறுதிக்கு முன்னேற்றம்

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.இதில் பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மாலை மலர்

ஆம்ஸ்டர்டாம்:

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் டி மினார் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கெய் டென் ஓடனை வீழ்த்தி

காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.