வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் வென்ற அமெரிக்காவின் டாமி பால், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெறுகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் அமெரிக்காவின் டாமி பால், இத்தாலியின் லூசியானோ டார்டெரி உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய டாமி பால் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் லேனர் டைனை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் இத்தாலியின் பிளேவியோ கோபாலி, மேட்டியோ பெரெட்டினி ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.