ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் சிலி வீரர் அலெஜாண்ட்ரோ டபிலோ அர்ஜெண்டினாவின் தியாகோ அகஸ்டினிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையா் பிரிவின் அரையிறுதி சுற்றில் அர்ஜெண்டினாவின் தியாகோ அகஸ்டின், சிலியின் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அர்ஜெண்டினா வீரர் தியாகோ 7-5, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் சிலியின் அலெஜாண்ட்ரோ டபிலோ அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.