டென்னிஸ்

வியன்னா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அல்காரஸ், ஸ்வரேவ் வெற்றி

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெறுகிறது.

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெறுகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயினி கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் கரண் கச்சனாவ் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 7-5, 6-3, 7-6 (13-11) என்ற செட் கணக்கில் போராடி ஸ்பெயினின் மார்டின் லேண்டலூசை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற போட்டிகளில் பிரிட்டனின் கேமரூன் நூரி, அமெரிக்காவின் டாமி பால் மற்றும் லேனர் டைன், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், இத்தாலியின் மேட்டியோ பெரேட்டேனி ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

SCROLL FOR NEXT