டென்னிஸ்

Barcelona Open | காயம் காரணமாக அல்காரஸ் திடீர் விலகல்

ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், செக் குடியரசின் தாமஸ் மசாக் உடன் மோத இருந்தார்.

இந்நிலையில், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அல்காரஸ் போட்டியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இதன்மூலம் தொடரில் இருந்தும் வெளியேறினார்.

செக் குடியரசு வீரர் தாமஸ் மசாக் காலிறுதிக்கு முன்னேறினார்.