டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அல்காரஸ், சிட்சிபாஸ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு ஸ்பெனின் கார்லோஸ் அல்காரஸ், கிரீசின் சிட்சிபாஸ் ஆகியோர் முன்னேறினர்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

இன்று நடந்த 2-வது சுற்றில் கிரீசின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் லூசியானோ டார்டெரி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் ஜுலான் மேனுவலை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT