டென்னிஸ்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் முன்னேறினார்.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், கனடாவின் டெனிஸ் ஷபவலோவ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 7-6 (7-3) என வென்றார். 2வது செட்டில் அல்காரஸ் 2-1 என முன்னிலை பெற்றிருந்த போது கனடா வீரர் காயத்தால் விலகினார். இதனால் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடக்கும் அரையிறுதி சுற்றில் அல்காரஸ், சக வீரர் ஜோம் மூனார் உடன் மோதுகிறார்.

SCROLL FOR NEXT