டென்னிஸ்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் முன்னேறினார்.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இரண்டாவது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் மேட்டியோ அர்னால்ட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6 (8-6), 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடக்கும் காலிறுதி சுற்றில் அல்காரஸ், கனடாவின் டெனிஸ் ஷபவலோவ் உடன் மோதுகிறார்.

SCROLL FOR NEXT