மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், மொனாக்கோவின் வேலண்டின் வெச்சராட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்றதுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.