டென்னிஸ்

பாரிஸ் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அல்காரஸ், பென் ஷெல்டன்

பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.

பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோர் முன்னேறினர்.

பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்சின் லூகா வான் ஆஷை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT