டென்னிஸ்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் அல்காரஸ்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் முன்னேறினார்.

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்சல்சன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 7-6 (7-1) என வென்றார். இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் மிச்சல்சன் 2வது செட்டை 6-4 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-1 என அல்காரஸ் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடக்கும் 2வது சுற்றில் அல்காரஸ், இத்தாலியின் மேட்டியோ அர்னால்ட் உடன் மோதுகிறார்.

SCROLL FOR NEXT