ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாட ஸ்பெயின் வீரர் ரபேல் ஜோடார் உள்பட 4 வீரர்கள் முதல் முறையாக தகுதி பெற்றனர்.
ஆண்டு இறுதி உலகத் தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் மற்றும் ஜோடிகள் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் இத்தாலியின் டுரின் நகரில் நடைபெறுகிறது.
இத்தாலியின் டுரின் நகரில் நவம்பர் 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை இனால்பி அரங்கில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாட ஸ்பெயின் வீரர் ரபேல் ஜோடார் உள்பட 4 வீரர்கள் முதல் முறையாக தகுதி பெற்றுள்ளனர்.
இந்தத் தொடருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க டாப் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் விவரம்:
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ்
ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ்
அமெரிக்காவின் பென் ஷெல்டன்
ரஷியாவின் டேனில் மெத்வதேவ்
இத்தாலியின் பிளாவியோ கோபாலி
பிரான்சின் ஆர்தர் பில்ஸ்
அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபோ
ஸ்பெயினின் ரபேல் ஜோடார்.
இவர்களில் பிளாவியோ கோபாலி, ஆர்தர் பில்ஸ், பிரான்சிஸ் தியாபோ, ரபேல் ஜோடார் ஆகியோர் முதல் முறையாக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட உள்ளனர்.
இந்த முறை இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது