விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் தன்வி ஷர்மா அதிர்ச்சி தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் நடந்து வருகிறது.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா தோல்வி அடைந்தார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சே நகரில் இன்று முதல் தொடங்கி வரும் 18-ம் தேதி வரை நடக்கிறது.

நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தென் கொரியாவின் ஆன்-சே யங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஆன்-சே யங் 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இந்தியாவின் தன்வி ஷர்மா தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

ஆண்கள்- பெண்கள் ஒற்றையர், ஆண்கள்- பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் என அனைத்துப் பிரிவிலும் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்த்னர்.

SCROLL FOR NEXT