விளையாட்டு

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: 2வது சுற்றில் தன்வி ஷர்மா அதிர்ச்சி தோல்வி

இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடரின் 2வது சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் நடந்து வருகிறது. வரும் 6-ம் தேதியுடன் இந்தத் தொடர் முடிவடைகிறது.

இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், பெண்கள் ஒற்​றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, ஜப்பானின் டொமோகா மியாசகி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மியாசகி 21-17 என்ற செட் கணக்கில் வென்றார். இதற்கு பதிலடியாக தன்வி ஷர்மா 2வது செட்டை 21-18 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மியாசகி 21-16 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இந்தியாவின் தன்வி ஷர்மா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். இந்தப் போட்டி 66 நிமிடங்களில் முடிந்தது.

ஏற்கனவே, பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் உன்னதி ஹூடா முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.