விளையாட்டு

சையத் மோடி பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் தன்வி ஷர்மா

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தன்வி ஷர்மா 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, மலேசியாவின் ஜோ ஜின் வெய் உடன் மோதினார்.

முதல் செட்டில் மலேசிய வீராங்கனை 2-1 என முன்னிலை பெற்றிருந்த நிலையில், காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து தன்வி ஷர்மா 2வது சுற்றுக்கு முன்னேறினார்

மற்ற போட்டிகளில் இந்தியாவின் தன்யா ஹேமந்த், தஸ்னிம் மிர் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

SCROLL FOR NEXT