விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் தன்வி ஷர்மா

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் நடந்து வருகிறது.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா வெற்றி பெற்றார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சே நகரில் இன்று முதல் தொடங்கி வரும் 18-ம் தேதி வரை நடக்கிறது.

இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, ஜப்பானின் நட்சுகி நிடாரியா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய தன்வி ஷர்மா முதல் செட்டை 21-17 என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடிய ஜப்பான் வீராங்கனை 2வது செட்டை 21-16 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை தன்வி ஷர்மா 21-19 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT