சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தன்வி ஷர்மா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, இந்தோனேசியாவின் புஸ்பிதாசரி உடன் மோதினார்.
சிறப்பாக ஆடிய இந்தோனேசிய வீராங்கனை 21-18 என முதல் செட்டை வென்றார்.
இதில் சுதாரித்துக் கொண்ட தன்வி ஷர்மா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-18, 21-18 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் இந்தியாவின் உன்னதி ஹுடா, அன்மோல் கார்ப், தஸ்னிம் மிர் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.