டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் தன்வி ஷர்மா முன்னேறினார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சே நகரில் இன்று முதல் தொடங்கி வரும் 18-ம் தேதி வரை நடக்கிறது.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, ஜெர்மனியின் யோன் லீ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தன்வி ஷர்மா 21-17, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறவுள்ள காலிறுதியில் தன்வி ஷர்மா தென் கொரியாவின் ஆன்-சே யங்குடன் மோதுகிறார்.