விளையாட்டு

சையத் மோடி பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் தன்வி ஷர்மா

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் உன்னதி ஹூடாவை வீழ்த்தி தன்வி ஷர்மா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக வீராங்கனையான தன்வி ஷர்மா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-11 என முதல் செட்டை வென்றார்.

இதில் சுதாரித்துக் கொண்ட தன்வி ஷர்மா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-10, 21-13 என கைப்பற்றி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தாய்லாந்தின் சுபனிதாவை சந்திக்கிறார்.

SCROLL FOR NEXT