கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.
இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா, சக நாட்டு வீராங்கனையான ஷ்ரியான்ஷி வேலிஷெட்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தன்வி ஷர்மா முதல் செட்டை 21-16 என வென்றார். இதற்கு பதிலடியாக வேலிஷெட்டி 2வது செட்டை 21-17 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை தன்வி ஷர்மா 21-13 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள காலிறுதியில் தன்வி ஷர்மா, சக நாட்டு வீராங்கனை ரக்ஷிதா ராம்ராஜ் உடன் மோதுகிறார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா 21-17, 21-16 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் கிம் மின்-ஜியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ரவுனக் சவுகான், கிரண் ஜார்ஜ், மிதுன் மஞ்சுநாத், சனீத் தயானந்த், தருண் மன்னேபள்ளி ஆகியோரும் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினர்.