லக்னோ:
சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி வரும் 23-ம் தேதி வரை நடக்கிறது.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தன்யா ஹேமந்துடன் மோதினார்.
27 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21 - 9, 21 - 9 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதையும் படியுங்கள்...முதல் ஒருநாள் போட்டி- இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா