பட்டம் வென்ற லக்சயா சென் 
விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் - சாம்பியன் பட்டம் வென்றார் லக்சயா சென்

இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.

மாலை மலர்

புதுடெல்லி: 

இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. 

இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென்னும், சிங்கப்பூர் வீரர் லோ கீன் யீவுடன் மோதினார்.

இதில் 24-22, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி லக்‌சயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதையும் படியுங்கள்...இந்திய ஓபன் பேட்மிண்டன் - இரட்டையர் பட்டம் வென்றது இந்திய ஜோடி