ஐபிஎல் கிரிக்கெட்டின் 6-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா-பெங்களூர் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசியில் நேரத்தில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் டோனியுடன் டு பிளிஸ்சிஸ் ஒப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் இறுதி கட்டத்தில் உதவியது. இலக்கை எட்டும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்பதை அறிந்த அவர் கூலாகவும் அமைதியாகவும் விளையாடினார். கடைசி 5 ஓவரில் எம்.எஸ்.டோனி எப்படி விளையாடுவரோ அதுபோல தினேஷ் கார்த்திக் கூலாக விளையாடினார்.
மேலும் கொல்கத்தா அணி வீரர்களின் பேட்டிங் வரிசையை சிதைத்த பந்து வீச்சாளர்கள் ஹர்சல் படேல் மற்றும் ஹசரங்காவுக்கு பாராட்டுக்கள். இது நல்ல வெற்றி. குறைந்த இலக்கை எட்டும் போது நம்பிக்கையுடன் விளையாட வேண்டும். எளிதாக நினைத்து விட்டு விட கூடாது. கொல்கத்தா அணி வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.
இவ்வாறு டு பிளிஸ்சிஸ் கூறினார்.
இதையும் படியுங்கள்...டு பிளிஸ்சிஸ்-க்காக வந்த சென்னை ரசிகர்கள்- நேற்றைய போட்டியில் நடந்த சம்பவங்கள் ஒரு அலசல்