அரை சதமடித்த மொயீன் அலி 
விளையாட்டு

மொயீன் அலி அபாரம் - வெஸ்ட் இண்டீசை 34 ரன்னில் வீழ்த்தியது இங்கிலாந்து

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இங்கிலாந்து கேப்டன் மொயீன் அலி அரை சதமடித்ததுடன், 2 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மாலை மலர்

பார்படாஸ்:

வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது 20 ஓவர் போட்டி பார்படாசில் இந்திய நேரப்படி நள்ளிரவில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது. கேப்டன் மொயீன் அலி அதிரடியாக ஆடி 28 பந்தில் 63 ரன்னும், ஜேசன் ராய் 52 ரன்னும், வின்ஸ் 34 ரன்னும் எடுத்தனர். 

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெசன் ஹோல்டர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 34 ரன்னில் வெற்றி பெற்றது.

கைல் மேயர்ஸ் 40 ரன்னும், ஹோல்டர் 36 ரன்னும் எடுத்தனர். கடந்த போட்டியில் சதமடித்த பொவெல் 5 ரன்னில் அவுட்டானார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இரு அணிகளும் 2-2 என சமனிலையில் உள்ளது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்...ஜூனியர் உலக கோப்பை - வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்தியா