சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர்.இளம்பரிதி. இவர் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதன்மூலம் 16 வயதில் சாம்பியன் பட்டத்தை வென்று இளம்பரிதி சாதனை படைத்துள்ளார். மேலும் தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இவர், இந்தியாவின் 90-வது மற்றும் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.