ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் 30வது லீக் போட்டி, ஏ குழுவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்தியா 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்துள்ளது.
அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் 56 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 38 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் சோபி மோலிநியூக்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து 171 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா விளையாட உள்ளது.
இப்போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால், இந்தியா தொடரிலிருந்து வெளியேறும். இந்தியா வென்றால், தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து வெளியேறும்.