விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரில் நீடிக்கும் தென்னாப்பிரிக்கா!

வங்கதேசம் தொடரில் இருந்து வெளியேறியது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற 29வது லீக் போட்டியில், ஏ குழுவில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதின.

போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 118 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியது. இருப்பினும் இந்தியா தனக்கு ஆஸ்திரேலியாவுடன் மீதமிருக்கும் ஒரு போட்டியில் தோற்றால் மட்டுமே தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்தியா வென்றால் ஆஸ்திரேலியா, இந்திய அணி ‘குழு ஏ’வில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறும்.