விளையாட்டு

2027 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் சூர்யவன்ஷியை சேர்க்க வேண்டும்- முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து விளையாட விடுங்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான ஸ்ரீகாந்த் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சூர்யவன்ஷி எல்லா வடிவிலான போட்டியிலும் விளையாடக்கூடிய திறமை படைத்த வீரர். நீங்கள் அவரை டெஸ்ட் போட்டியில் களம் இறங்க வைக்க விரும்பவில்லை என்றாலும் பரவாயில்லை.

ஆனால், அவரை 15 பேர் கொண்ட அணியிலாவது வைத்திருங்கள். அடுத்து இலங்கை அணி ஒருநாள் போட்டியில் விளையாட வரப்போகிறது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து விளையாட விடுங்கள். நீங்கள் உண்மையிலேயே சூர்யவன்ஷியை வளர்க்க விரும்பினால், அவரை 2027-ம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும்.

ஒருநாள் அவர் தனி ஒருவராக உங்களுக்கு போட்டிகளை வென்று தருவார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT