விளையாட்டு

மாநில சீனியர் போட்டி: சென்னை மாவட்ட ஆக்கி அணி நாளை மறுநாள் தேர்வு

கோவில்பட்டியில் வருகிற 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது.

மாவட்டங்களுக்கு இடையிலான மாநில சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வருகிற 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட ஆக்கி அணி தேர்வு எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

இந்த தகவலை சென்னை ஆக்கி சங்க செயலாளர் எம்.எஸ்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.