பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சக வீரரான ஆயுஷ் ஷெட்டி உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய கிடாம்பி 21-19 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஆயுஷ் ஷெட்டி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-16, 21-12 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் ஸ்ரீகாந்த் கிடாம்பி முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.