சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நடராஜ் 
விளையாட்டு

இந்திய நீச்சல் வீரர்களுக்கு விளையாட்டு அமைச்சகம் நிதி உதவி

பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சிக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற சஜனுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது.

புதுடெல்லி:


மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் ஒலிம்பிக் பதக்க மேடை இலக்குத் திட்டம் மற்றும் வருடாந்திர பயிற்சி மற்றும் போட்டித் திட்டத்தின்கீழ், இந்த ஆண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்க, இந்திய நீச்சல் வீரர்களுக்கு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி இந்திய நீச்சல் வீரர்கள் சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நடராஜ், மானா படேல் மற்றும் கெனிஷா குப்தா ஆகியோருக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

பயிற்சி மற்றும் பயிற்சி முகாம்களுக்கான செலவுக்காக, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற சஜனுக்கு, ரூ.15.1 லட்சம் வழங்கப்படவுள்ளது.

இதேபோன்று ஸ்ரீஹரி நடராஜ்-க்கு 22.02 லட்சமும், மானா படேல் மற்றும் கெனிஷா குப்தாவிற்கு தலா ரூ.3.89 லட்சமும் நிதிஉதவி வழங்கப்படுவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT