கரோலினா மரின் 
விளையாட்டு

Badminton | திடீர் ஓய்வை அறிவித்த கரோலினா மரின்

கரோலினா மரின் ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர்.

ஸ்பெயினைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை கரோலினா மரின். இவர் கடந்த 15 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.

மும்முறை உலக சாம்பியனான மரின், ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர். இவர் 66 வாரங்கள் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.

இந்நிலையில், பேட்மிண்டன் வீராங்கனையான கரோலினா மரின் தனது ஓய்வு முடிவு குறித்த அறிவிப்பை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

தொடர்ச்சியான முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்த அந்த ஸ்பெயின் வீராங்கனை, நீண்ட காலமாக விளையாட்டிலிருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT