விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 77.78 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்தது தென் ஆப்பிரிக்கா

நடப்பு சாம்பியனான தென் ஆப்பிரிக்காவுக்கு இன்னும் 5 டெஸ்ட் உள்ளன.

வங்கதேசத்திற்கு எதிராக செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றிப் பெற்றது. அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 219 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தது.

வங்கதேசத்திற்கு எதிராக 2 டெஸ்டிலும் வெற்றி பெற்றதால் தென் ஆப்பிரிக்கா உலக சாம்பியன்ஷிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த அணியின் புள்ளிகள் அதிகரித்துள்ளது.

75.00 புள்ளிகளில் இருந்து அந்த அணியின் புள்ளி தற்போது 77.78-ஆக உயர்ந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்கா 9 போட்டியில் 7-ல் வெற்றி பெற்றது. 2 டெஸ்டில் தோற்றது.

அந்த அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

நடப்பு சாம்பியனான தென் ஆப்பிரிக்காவுக்கு இன்னும் 5 டெஸ்ட் உள்ளன. டிசம்பர் மாதம் இங்கிலாந்துடன் 3 டெஸ்டிலும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இலங்கையுடன் 2 டெஸ்டிலும் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா 69.23 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 3-வது இடத்திலும் (66.67), இந்தியா 4-வது இடத்திலும் (50.00) உள்ளன.

இங்கிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளன.

SCROLL FOR NEXT