ஆசிய பாரா விளையாட்டில் ஒரே நாளில் வில்வித்தையில் இரண்டாவது தங்கம் வென்ற ஷீத்தல் தேவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஜப்பானில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிய பாரா விளையாட்டில் வில்வித்தையில் காம்பவுன்ட் தனிநபர் மகளிர் பிரிவில் ஷீத்தல் தேவி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
முன்னதாக, இந்தியாவின் ஷீத்தல் தேவி – டோமன் குமார் ஜோடி காம்பவுண்ட் கலப்பு அணி பிரிவு இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவை 151–148 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதன்மூலம் இந்தத் தொடரில் இந்தியாவுக்கு வில்வித்தையில் முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது.
நடப்பு தொடரில் ஷீத்தல் பெறும் இரண்டாவது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷீத்தல் தேவி இரண்டு கைகள் இல்லாமல் பிறந்தவர். அவர் தனது கால்கள், தோள் பட்டைகளை வைத்து வில்வித்தையில் ஒரே நாளில் இரண்டாவது தங்கம் வென்று பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறார்.